Latest Post

8:14 PM
இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம்.

கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

இதற்கான விரிவான தீர்வாக ஆப்பிளும் கூகுளும் இணைந்து, அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டெர்பேஸ் மற்றும் இயங்குதள அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்” என்றது.

இந்த வசதி ஸ்மார்ட்போன் இயங்குதளம் மூலம் நேரடியாக இயங்குகிறது. இதற்கென தனி செயலியை பதிவிறக்க தேவையில்லை. சிஸ்டம் அப்டேட் செய்தால் போதும்.

ஒரு உதாரணம் மூலம் இவற்றை விளக்கியுள்ளனர். இரண்டு பேர் ஒரு இடத்தில் சில நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, பின்னணியில் இயங்கும் ப்ளூடூத், அவர்கள் தொடர்பில் இருந்ததாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பிவிடும்.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் அதனை அரசின் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் நாம் அனுமதி கேட்கும், நாம் அனுமதித்தால், நம்முடன் நெருக்கமான வட்டத்தில் இருந்த நபர்களின் மொபைல் போன் விவரங்களை அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் தற்காலிகமாக 14 நாட்களுக்கு கணினியின் சேர்வரில் பதிவேற்றப்பட்டிருக்கும்.

8:06 PM

...


பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(07.04.2020) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும், கிழக்கு மாகாணத்தில், சந்திரன் செம்மஞ்சள் நிறத்தில் மிகப் பிரகாசமாக தென்பட்டுள்ளது.




8:01 PM


வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள கல்வித்துறை தொடர்பில் அரசாங்கத்தால் மேலும் வலுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவர் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

இதற்காக கல்விமான்களின் கல்வித்துறைசார் அதிகாரிகளின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய சூழல் எப்போது நிறைவடையும் என்பது தொடர்பில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது.

இம்மாத இறுதியில் கல்வி நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்று நாம் எண்ணவில்லை. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது இறுதித் தவணையை நிறைவு செய்திருக்க வேண்டும். இவ்வாறான விடயங்களை கருத்திக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.

அத்தோடு விடுமுறை தினங்களில் மாணவர்கள் தவறான பாதையில் சென்றுவிடாது கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

8:35 PM
மாவட்ட மட்ட கரம் சுற்றுப்போட்டி இன்று (16) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று கரம் அணியினர் அம்பாரை மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

அக்கரைப்பற்று கரம் அணியினா் தொடர்ச்சியாக நான்காவது முறையும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில்  இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதணை படைத்துள்ளனா்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.